Friday, December 15, 2017

நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.

Nama Article 19th December 2017


Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு இடம் ஏது? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, 'அம்மா அம்மா' என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. 

லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 




ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவந் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும்.

Nama Article 18th December 2017


Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவந் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். 


இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் – அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாடவேண்டும்.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 




பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம ஸங்கீர்த்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது: கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.

Nama Article 17th December 2017


Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம ஸங்கீர்த்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது: கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 



கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பதற்கு இதெல்லாம் வழிகள்.

Nama Article 16th December 2017

Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


இவ்வாறு நாம சங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கீதங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். 


கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பதற்கு இதெல்லாம் வழிகள். 


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 



பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதில் பகவானின் நாம சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.

Nama Article 15th December 2017

Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதில் பகவானின் நாம சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. 


ஸ்ரீபகவந்நாம போதேந்திரர்கள், "ஸதாநந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேசுவரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, 'ஹரி' 'சிவ', முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான்" என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமல்ல. மூர்த்தியைப்போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 



சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

Nama Article 14th December 2017

Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. 

நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது நாம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 



பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.

Nama Article 13th December 2017

Source: நாம மகிமை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)


இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. 'ரகுபதி ராகவ ராஜாராம்', 'ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே' என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.

பஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு. 


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare